புதுச்சேரிக்கு மிக அருகாமையிலிருக்கும் விமான நிலையம் புதுச்சேரியிலிருந்து சுமார் 135 கி.மீ. தொலைவில் உள்ள சுமார் 2½ மணி நேர பயணத்தில் உள்ள சென்னை .விமான நிலையமே ஆகும். சென்னைக்கு இந்தியாவிலுள்ள பெரும்பாலான நகரங்களுடனும் ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளுக்கு நேரடியான இணைப்பு உண்டு. மேலும் 220 கி. மி. தொலைவில் திருச்சி விமான நிலையம், 320 கி.மீ. தொலைவில் பெங்களுர் விமான நிலையம் ஆகியவையும் உள்ளன.
சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், விழுப்புரம் ரயில்நிலையம் புதுச்சேரிக்கு மிக அருகே உள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களையும் அவற்றின் அனைத்து மாவட்டங்களையும் புதுச்சேரி நன்கு இணைக்கிறது. சாலை மார்கமாய் மூலம் புதுச்சேரியை சிறப்பாய் அணுகலாம். பகல் நேரத்தில் பெரும்பாலும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை சென்னையிலிருந்து புதுச்சேரி வர பேருந்து வசதி உள்ளது. பயணம் சுமார் மூன்றரை மணி நேரம் பிடிக்கும். இதை போலவே கடலூர், விழுப்புரம், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, கோயம்பத்தூர், பெங்களுர் ஆகிய பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்கு சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன.

வரலாறு
“ப்ரான்சிஸ் டூப்ளே சிலை நிற்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் ஜோன் ஆப் ஆர்க். நிறுவப்பட்டிருக்கும். புதுச்சேரியின் நேர்கொண்ட தெருக்களில் பயணிக்கும் போது பிரான்ஸில் பயணிப்பது போலிருக்கும்.”
போர்ச்சுகல், டச்சு, டேனிஷ், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டு மக்கள் இங்கு இருந்துள்ளனர்.
18ம் நூற்றாண்டு வரை ஒரு சாதாரண மீன் பிடி கிராமமாக இருந்த புதுச்சேரி ஒரு பிரம்மாண்ட துறைமுக நகரமாய் உரு மாற்றப்பட்டது. 1670 ஆண்டில் புதுச்சேரியில் காலடி பதித்த பிரஞ்சு மக்கள், 1954 ஆண்டில் தங்கள் ஆட்சி முடிவுற்ற போது அவா்களது பதிவுகளை விட்டு சென்றனா். அதன் பிறகு புதுச்சேரி நகரின் தோற்றத்தில் அதிகளவில் மாற்றமில்லை. புதுச்சேரியின் வாசம் இன்றும் அதன் பிரஞ்சு நினைவுகளை சுமந்து கொண்டும் பிரஞ்சு பாரம்பரியத்தை பறை சாற்றிக் கொண்டும் திகழ்கின்றது. சுறுசுறுப்பான புதுச்சேரியில் பயணிக்கும்போது, தனது ஸ்வாரஸ்யமான நினைவுகளை புதுச்சேரி கொண்டாடி மகிழ்வதை உணர முடியும். புதுச்சேரி ரோமானிய வரலாறு கொண்டிருந்தாலும், தனது வரலாறாக, 1670-ம் ஆண்டு பிரஞ்சு மக்கள் வருகை தந்து புதுச்சுரி நகரை அவா்கள் திட்டமிட்டு நிறுவி இரண்டரை நூற்றாண்டு காலம் ஆட்சி செலுத்தியதில் துவக்குகிறது.

”புதுச்சேரி” என்ற அழைக்கப்படும் பிரெஞ்சு பதத்திற்கு ‘‘புதிய குடியிருப்பு’’ என்று அர்த்தமாகும். இராமேஸ்வரம் போன்ற திருக்கோயில்களுக்குச் செல்லும் பல யாத்ரீகர்கள் புதுச்சேரியின் விருந்தோம்பலை பகிர்ந்துக் கொண்டதால், நகரத்தின் கலாச்சாரம் மெருகு கூடியது.…
ஆரம்ப காலம்

புதுச்சேரியின் வரலாறு தெரிந்தவரையில் நமது சகாப்தம் துவங்குகிற காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. புதுச்சேரிக்கும் நல்ல வளமான கடல்சார்ந்த வரலாறு உள்ளது. நகரத்தின் தென் புறத்தில் 7 கி.மீ தொலைவில் உள்ள அரிக்கமேடு கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் முதல் நூற்றாண்டில் ரோமானியர்கள் இங்கு வணிக நிமித்தமாக வந்துள்ளதை பறைசாற்றுகிறது.
ரோமானியர்களின் வணிக பொருட்களாக சாய ஜவுளிகள், மண்பாண்டங்கள், விலை உயர்ந்த கற்கள் ஆகியவை கிடைத்துள்ளன. கண்டெடுக்கப்பட்ட இந்த பொருட்கள் புதுச்சேரி அருங்காட்சியகத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுளன. இந்திய கடற்கரையில் அமைந்துள்ள ஒரு வியாபார மையம் ‘பொதுகா” அல்லது ‘பொதுகே” என பண்டைய ரோமானிய குறிப்புகளில் இருப்பது தற்போதைய புதுச்சேரியே என வரலாற்று ஆசிரியர்கள் உறுதிசெய்கின்றனர்.
இதற்கு முந்தைய காலகட்ட விபரங்கள் சரிவர தெரியவில்லை. எட்டாவது நூற்றாண்டை சார்ந்த ”பகூர் தட்டுகள்”, சமஸ்கிருத பல்கலைக்கழகம் ஒன்று பல காலங்களுக்கு முன் இருந்தே இங்கு திகழ்வதாக குறிப்பை விட்டு சென்றுள்ளது. மேலும், அகஸ்திய முனிவர் இங்கு தனது ஆசிரமத்தை நிறுவியதாகவும், அதனால் இந்த இடம் அகஸ்தீஸ்வரம் என அழைக்கப்பட்டதாகவும் கூறுவர். வேதபுரீஸ்வரர் கோயிலருகே காணப்பட்ட ஒரு குறிப்பு இந்த செய்தியை மேலும் ஊர்ஜிதப் படுத்துகிறது.
நான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில் காஞ்சிபுரத்தின் பல்லவ அரசின் ஒரு பகுதியா புதுச்சேரி இருந்த சமயம், அதன் வரலாறு துவங்குகிறது. அதன் பிந்தைய நூற்றாண்டுகளில் பிற தெற்கத்திய மன்னர்களின் ஆட்சிகளின் கீழ் புதுச்சேரி மாறியது.
பாண்டிய ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரி தஞ்சை சோழர்களின் ஆட்சிக்கு மாறியது. வடக்கின் முகலாய அரசர்களின் படையெடுப்பிற்கு பிறகு, தென் இந்தியாவின் பெரும் பகுதியை விஜயநகர பேரரசு அதன் கட்டுப்பாட்டுக்குள் 1638 ஆண்டு வரை வைத்திருந்தது. அவ்வமயம் செஞ்சியை பிஜாபூரின் சுல்தான் ஆட்சிசெய்தார்.

வெளிநாடுகளுடன் தொடர்புகள்
அறியப்படாத காலம் முதல் அரபு வியாபாரிகள் இந்திய கடற்கரை பகுதிகளுக்கு வணிக நிமித்தம் வந்து சென்றது போல் இல்லாமல், பின்னர் வந்த ஐரோப்பிய வணிகர்கள் வணிகத்தோடு இல்லாமல், துணை கண்டம் முழுவதும் குடியேற துவங்கினர்.
1497-ம் ஆண்டில், போர்ச்சுகீசியர்கள் இந்தியாவிற்கு வரும் கடல் மார்க்கத்தை கண்டுடித்ததோடில்லாமல், கடற்கரைப் பகுதியை ஆக்கிரமிக்க துவங்கி, 12000 மைல்களுக்கு மிகுதியான கடற்கரையோர பகுதிகளில் துறைமுக நகரங்களை நிறுவினார்கள்.
16-ம் நூற்றாண்டு துவக்கத்தில் போர்ச்சுகீசியர்கள் புதுச்சேரியில் ஒரு தொழிற்சாலை நிறுவினார்கள். ஆனால், அதற்கு அடுத்த நூற்றாண்டிலேயே பகைமை காரணமாக செஞ்சி அரசரால் துரத்தியடிக்கப்பட்டார்கள். அதன் பிறகு, டேன்ஸ் நாட்டினரும், டச்சு நாட்டினரும் புதுச்சேரியில் குடிபுகுந்தனர். அவா்களில் டச்சு நாட்டவர் போர்டோ நோவோ மற்றும் கடலூரில் வர்த்தக நிலையங்களை நிறுவினார்கள். டச்சுகாரர்களுக்கு போட்டியாக வடக்கு பகுதி, மாஹி மற்றும் சென்னையில் வர்த்தக நிலையங்களை கொண்டிருந்த பிரெஞ்சுக்காரர்களை டச்சு வணிகர்களுக்கு போட்டியாக புதுச்சேரியில் வியாபார நிலையம் துவங்க செஞ்சியின் புதிய அரசர் அழைப்பு விடுத்தார்.
1673-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் நாள் பெல்லாங்கர் என்கிற ஒரு பிரெஞ்சு அதிகாரி புதுச்சேரியில் உள்ள ஒரு டேனிஷ் விடுதியில் தங்கிய நாள் முதல் புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சி துவங்கியது. 1674-ம் ஆண்டு முதல் பிரஞ்சு கவர்னராக வந்த பிரான்காய்ஸ் மார்டின் சாதாரண மீன்பிடி கிராமமாயிருந்த புதுச்சேரிய செழிப்பு மிக்க ஒரு துறைமுக நகரமாய் மாற்றினார்.
1693-ம் ஆண்டு, புதுச்சேரியை டச்சு நாட்டவர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நகரை நன்கு பராமரித்தனர். ஆனால், நான்கு வருடங்களுக்குப் பிறகு, 1699-ல், ஹாலாந்தும் பிரெஞ்சும் ஒரு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். அதன்படி பிரெஞ்சு மீண்டும் புதுச்சேரியை தனது கட்டுக்குள் கொண்டுவந்தது. 18-ம் நூற்றாண்டில் புதுச்சேரி நகரம் படிப்படியாக கணிசமாக பொலிவு பெற்றது.
லெனாய்ர் (1726-1735) மற்றும் தூமாஸ் (1735-1741) போன்ற திறம்மிக்க ஆளுநர்களும் உயர் குறிக்கோள் கொண்ட தூய்ப்ளே (1742-1754) எனும் ஆளுநரும் புதுச்சேரியை விரிவடையச் செய்து செழிப்புமிக்க பெரிய நகரமாக்கினார்கள். ஆனால் கொள்கை அடிப்படையில் ஆங்கிலேயர்களுடனும், உள்நாட்டு ராஜ்யங்களுடனும் மோதல்களும் அரசியல் கிளர்ச்சிகளும் தோன்றின. தளபதி புஸ்ஸியின் தலைமையில் தூய்ப்ளேயின் படை வெற்றிகரமாக ஹைதராபாத்திற்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால், அது சமயம் முரட்டுத் தனத்திற்கு பெயா் போன ராபர்ட் க்ளைவ்-ன் இந்திய வரவால், இந்தியாவையே பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் தூய்ப்ளேயின் கனவு தவிடு பொடியானது. ஆங்கிலேயர்களுடன் போரில் தோல்வியும், பேச்சு வார்த்தை தோல்வியும் தூய்ப்ளேயை பிரான்சிற்கே திரும்பும்படி ஆனது.
ஆங்கிலேயர்களும் பிரெஞ்சும் தங்களுக்குள்ளே அரசியல் தலையீடு இருக்காது என்று ஒப்பந்தம் செய்து கொண்டாலும், பகைமை உணர்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. மேலும், ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டே துரத்தவும், பிரெஞ்சின் போர் இழப்புகளை மீட்கவும் லல்லி தொலான்தால் என்பவரை பிரான்ஸ் அனுப்பியது. கடலூரில் உள்ள செயிண்ட் தாவீது என்கிற கோட்டையை தரைமட்டமாக்கியது லல்லியின் படை. ஆனால், இந்த ஆரம்ப வெற்றிக்கு பிறகு, லல்லி ஹைதராபாத் மற்றும் புதுச்சேரி முற்றுகையை தனது தவறான யுத்ததந்திரத்தால் 1760-ம் ஆண்டில் இழக்க நேர்ந்தது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் 1761-ம் ஆண்டில் புதுச்சேரி தரைமட்டமாக்கபட்டு, இடிபாடுகளுடன் 4 வருடங்கள் இருந்தது. தென் இந்தியாவில் இருந்து பிடியை பிரஞ்சு இழந்தது.
ஐரோப்பாவில் இங்கிலாந்துடனான அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகு 1765-ம் ஆண்டு, புதுச்சேரி நகரம் பிரஞ்சு ஆட்சிக்கு திரும்ப கொடுக்கப்பட்டுவிட்டது. லா தி லாரிஸ்டன் என்ற ஆளுநர் பழைய அடித்தளங்களை கொண்டு புதுச்சேரியை புனரமைப்பு செய்து, ஐந்து மாதங்களில், 200 ஐரோப்பியர் மற்றும் 2000 தமிழ் குடும்பங்களின் வீடுகள் கொண்டு நிறுவப்பட்டது. அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு, புதுச்சேரி, பிரெஞ்சு மற்றும் இங்கிலாந்து ஆட்சிகளின் கீழ் யுத்தங்களாலும், அமைதி ஒப்பந்தங்களாலும் மாறிக்கொண்டிருந்தது.
1816-ம் ஆண்டிற்கு பிறகே, பிரெஞ்சிற்கு புதுச்சேரி மீதான நிரந்தர கட்டுபாட்டை பிரான்சு திரும்ப பெற்றது. அதற்குள் புதுச்சேரி நகரம் தனது முந்தைய பொலிவை பெரும்பாலும் இழந்திருந்தது. அதன் பின் வந்த ஆளுநர்கள் அடுத்த 138 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு, தொழிற்சாலை, சட்டம் மற்றும் கல்வி ஆகியவற்றில் புதுச்சேரியை வளா்ச்சி பெற செய்தனர். 1947-ம் ஆண்டில் நல்லெண்ண அடிப்படையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்றாலும், பிரஞ்சு மக்கள் புதுச்சேரியை சுதந்திர இந்தியாவிடம் ஒப்படைக்க 1954-ம் ஆண்டு ஆனது.

சுதந்திரத்திற்குப் பிறகு…
நவம்பா் 1, 1954-ல் இந்தியாவிலுள்ள பிரஞ்சின் உரிமைகளெல்லாம் இந்திய யூனியனுக்கு மாற்றப்பட்டு, புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசமாக மாறியது. 280 ஆண்டுக் கால பிரெஞ்ச் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால், 1963-ம் ஆண்டில், பாரிசிலிருக்கும் பிரெஞ்சு பாராளுமன்றம் இந்தியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் செய்த பிறகே புதுச்சேரி அதிகாரபூர்வமாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது. 1963-ம் ஆண்டில், இந்திய பாராளுமன்றம் யூனியன் பிரதேசங்களுக்கான சட்டைத்தை இயற்றிய பின்னரே புதுச்சேரியில் சட்ட பேரவையும் மந்திரி சபையும் அமைக்க ஏதுவானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 239 படியும், யூனியன் பிரதேச அரசு சட்டம் 1963-ன் பகுதி 46 –ன் படியும், இந்திய ஜனாதிபதி புதுச்சேரி அரசின் வர்த்தக (ஒதுக்கீடு) விதிகள், 1963 ஆகியவற்றை உருவாக்கினார்.
மேதகு துணைநிலை ஆளுநர் அவா்களே புதுவைக்கான மத்திய அரசின் பிரதிநிதி. முந்தைய பிரஞ்சு அரசின் கவர்னர் பங்களாவே தற்போதை துணைநிலை ஆளுனர் குடியிருக்கும் ராஜ்நிவாஸ். அதில் குடியிருக்கும் புதுச்சேரியில் தற்போதும் பல தமிழர்கள் பிரஞ்சு பாஸ்போர்ட்களுடன் வசித்து வருகின்றனர். அவா்களின் முன்னோர்கள் பிரான்சில் வசித்து வந்ததினால் சுதந்திரம் கிடைத்த காலத்தில், அவா்கள் புதுச்சேரியில் பிரஞ்சு குடியுரிமையுடன் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர். பல பிரெஞ்சு கால நினைவுச்சின்னங்களுக்கு நடுவே, புதுச்சேரியில் பிரெஞ்சு தூதரகம் ஒன்றும் பல கலாச்சார அமைப்புகளும் உள்ளன. பிரெஞ்சு இராணுவ வீரர்களுக்கான முகப்பும் உள்ளது. அவற்றுள் பிரெஞ்சு கலாச்சார அமைப்பில் பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட், அலையன்ஸ் பிரான்சிஸ், எக்கோல் பிரான்சிஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கன.

டிசம்பர் துவங்கி பிப்ரவரி மாதம் வரை இங்கு குளிர்காலம் சராசரியாக 30° செ. வெட்பநிலை காணப்படும். மேலும் இரவில் இதமான குளிரான நிலை காணப்படும்.
மார்ச் முதல் ஜுலை மாதம் வரை வெப்பமான காலநிலை நிலவும். மே மாதம் மற்றும் ஜுன் மாதங்களின் சராசரியாக தட்பவெட்ப நிலை 40° செ.-ஐ தொடும். பொதுவான தட்பவெட்பம் 35° C-38° C.

Perambalur(18 kms) to ariyalur(12 kms) main road
Kunnam –right way veppur road2nd killometer
andhur , right way 1.5 kms– varagur
andhur , right way 1.5 kms– varagur